The Indian Times

மணிமேகலைக்கு ஹுசைனுக்கும் முதல் விருந்து வைத்த மணிமேகலை அம்மா… சூப்பருங்க நீங்க

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

Advertisement

தற்போது மணிமேகலைக்கு ஹுசைனுக்கும் மணிமேகலை அம்மா தனது கையால் சமைத்து கொடுத்துள்ளார்.விதவிதமாக சமைத்து கொடுத்து விருந்து வைத்து அசத்தியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இதுபோல நீங்கள் மகிழ்ச்சியாக எப்பொழுதும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும் என வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : HUSSAIN MANIMEGALAI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in