The Indian Times

வாரிசை அழிச்சிடுவோம்…அடித்துக்கொள்ளும் அஜித் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்களின் படங்களுக்குள் போட்டி அதிகம் இருக்குமே தவிர இவர்களுக்குள் போட்டிகள் இல்லை அளவு கடந்த அன்பும் நட்பும் மட்டும் தான் இருக்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை இருவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் தான்.ஆனால் இது என்னவோ இவர்களின் ரசிகர்களுக்கு புரியவில்லை.அடிக்கடி இவர்களின் ரசிகர்ளுக்குள் இணையவழி போர் நடந்து வருகிறது.விஜய் படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும்,அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் படத்தினை கலாய்ப்பதும் வாடிக்கையான ஒன்றாக தமிழ் சினிமாவில் இருந்து வருவது வேதனை அளிக்கும் விஷயமா உள்ளது

Advertisement

1995 ஆம் ஆண்டு வெளியாகிய ராஜாவின் பார்வையிலேயே படத்தின் மூலம் முதல் முறையாக இருவரும் இணைந்து நடித்தனர்.பின்னர் இருவரின் பாதைகளும் வெவ்வேறாக மாறி லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்கள்.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகினாலே தீபாவளி திருவிழா போல் திரையரங்கில் கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.அடிக்கடி இவர்கள் ரசிகர்கள் இணையத்தில் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது

Advertisement

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தினை அஜித் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்,இந்நிலையில் அண்மையில் அஜித் படத்தின் துணிவு போஸ்டர் வெளியாகியது,தற்போது விஜய் ரசிகர்கள் அஜித் படத்தினை கிண்டலடித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர் ,அதற்கு அஜித் ரசிகர்களும் எங்களுடன் மோத துணிவு வேண்டும் வாரிசை அழித்திடுவோம் என மீண்டும் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in