The Indian Times

போண்டாமணிக்கு உதவி பண்ணுவீங்களா?கேள்விக்கு வடிவேலு அளித்த பதிலால் அதிர்ச்சி

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது. அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்.தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.தற்போது இயக்குனர் வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் வடிவேலு காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

Advertisement

இவர் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.அப்பொழுது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் ,பேட்டியில் நாய் சேகர் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,அதற்கு பதிலளித்த வடிவேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மேலும் இரண்டு கிட்னி செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ள போண்டாமணிக்கு உதவுவீங்களா என கேட்டதற்கு கட்டாயம் என்னால் முடிந்ததை செய்வேன் அவர் பாவம் என கூறியுள்ளார்.வடிவேலு இவ்வாறு கூறியது ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in