The Indian Times

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் அரிய புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.

Advertisement

இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

இப்படங்களுக்கு பிறகு மணிரத்தினத்தின் உயரம் இன்னும் பல மடங்கு தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.அடுத்ததாக இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் இளம் வயதில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ஆச்சரியமாக புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in