The Indian Times

முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க – கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையுடன் வெளியாகி இருக்கும் படம் கேரளா ஸ்டோரி.இப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.மேலும் தவறாக சித்தரிக்கும் இந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.இப்படத்தினை இயக்குனர் சுதிப்டோ சென் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஆதா சர்மா,யோகிதா,சித்தி இதானி ,விஜய் ஷர்மா என சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் அவர் கூறியதாவது,இஸ்லாமியர்கள் இப்படம் தங்களை இழிவு படுத்தும் விதமாகத்தான் இருந்துள்ளதாக கூறி வருகின்றனர்.இப்படத்தை பார்க்கும் பொழுது அவர்கள் சொல்வது தான் உண்மை என்பது தெரிகிறது.படத்துல முஸ்லீம் பெண்களை அசிங்கப்படுத்துவதாக கூறி ஹிந்து பெண்களை அசிங்கப்படுத்தி வச்சிருக்காங்க.நாளையில் இருந்து ஹிந்துக்களும் போராட்டம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க

Advertisement

படமா பார்க்கும் பொழுதும் கூட இப்படம் இலக்கு இல்லாமல் ஓடிகிட்டு இருக்கு ,முஸ்லிம்களுக்கு கெட்ட பெயர் வரும் ஆனால் அது தற்காலிகம் தான்,என படத்தினை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in