The Indian Times

தர லோக்கலாக சத்தம் போட்டு கைத்தட்டிய நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

Advertisement

திருமணம் முடிந்த கையேடு ஹனிமூன் சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் படங்கள் வேலை இருந்ததால் விரைவில் நாடு திரும்பினர்.தற்போது படத்தின் வேலைகளை முடித்து கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு மீண்டும் ஹனி மூன் சென்றுள்ளனர்.அங்கு பல இடங்களையும் சுற்றிப்பார்த்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது இவர் மனைவி நயன்தாராவுடன் இணைந்து நடன நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.அங்கு நடனத்தினை பார்த்த நயன்தாரா சத்தம் எழுப்பி கை தட்டி என்ஜாய் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

https://www.youtube.com/shorts/DG5f6lJLI98

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in