The Indian Times

பாண்டியன் ஸ்டோர் 1000 Episode செலிபிரேஷனில் VJ சித்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த நாடகம் ஆயிரம் எபிசோட் தொட்டுள்ளதால்,அதனை சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சி கொண்டாடியுள்ளது.நாடக நடிகர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடல் பாடல் என அலப்பறை செய்துள்ளனர்.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் இந்த நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் விஜே சித்து.

இவர் தற்கொலை செய்து இறந்தார்.இவருக்கு பிறகு இந்த வேடத்தில் காவியா என்பவர் நடித்து வருகிறார்.இருப்பினும் சித்து இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் மறைந்த விஜே சித்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

Embed video credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in