The Indian Times

கேன்சரால் பாதிக்கப்பட்ட தனம்.. உண்மையை தனத்திற்காக வீட்டில் மறைக்கும் மீனா.. பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிகிறது,தற்போது பிரிந்த குடும்பம் மீண்டும் பல்வேறு சண்டைகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளது.கதிர் எதிரி கர்ப்பிணியான முல்லையை பைக்கை கொண்டு ஏற்றுகிறார்.முல்லையை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் கதிர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை பிறக்கிறது

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கேன்சர் இருப்பதாக டாக்டர் கூறுகிறார்,இதனை கேட்டு தனம் மற்றும் மீனா ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்,மேலும் தனம் இதை கேட்டால் மூர்த்தி தாங்கமாட்டார்,வீட்டில் யாரிடமும் இதனை சொல்ல வேண்டாம் என தனம் மீனாவிடம் கேட்டுக்கொள்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in