The Indian Times

தேர்தலில் ஜெயித்து கோதை முகத்தில் கரியை பூசிய தமிழ்.. தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடகத்தில் தமிழ் கோதையை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்க வருகின்றனர்.இதனால் தமிழ் பெரும் பரபரப்பில் உள்ளார்,மேலும் ரசிகர்களும் பெரும் பரபரப்பில் யார் வெற்றிபெற போவது என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் தமிழ் 146 வாக்குகளை பெற்று கோதையை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்,இதனால் தமிழ் தரப்பினர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்,அதே சமயம் கோதைக்கு தமிழ் மேல் உள்ள கோவம் மூன்று மடங்கு மேல் அதிகரித்துள்ளது.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

https://youtu.be/5wAaWNe_m3s

Embed Video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in