The Indian Times

குக்கு வித் கோமாளி புகழுடன் car ride சென்ற சாம் விஷால்

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அதிலும் குக்கு வித் கோமாளி புகழுக்கு சொல்லவே வேண்டாம் , இந்த சீசனில் அதிகளவில் ரசிகர்களை சேர்த்தவர் குக்கு வித் கோமாளி புகழ் தான். தற்போது இந்த சீசன் முடிவடைந்த நிலையில் புகழ் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி எந்தளவிற்கு பிரபலமடைந்த நிகழ்ச்சியோ அதே போல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

சூப்பர் சிங்கர் மூலம் அதிக ரசிகர்கள் கொண்ட பிரபலங்களில் சாம் விஷாலும் ஒருவர். தற்போது இவர் விஜய் டிவியின் முரட்டு சிங்கள் என்ற நிகழியில் கலந்து கொண்டார். இந்நிலையில் சாம் விஷாலும் , குக்கு வித் கோமாளி புகழும் கார் ride போயிருக்காங்க. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in