The Indian Times

“என் குடும்பத்துல இருக்கவுங்களுக்கு பெருமை சேத்துட்டு, செத்து போணும்” Baba Baskar Emotional Speech

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது.

Advertisement

இந்த சீசன் விண்ணீராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார். இந்நிலையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கனி , chef வெங்கடேஷ் பட் , பாபா பாஸ்கர் , அஸ்வின் மதுரை முத்து , ஷகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாபா பாஸ்கர் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

கண் பார்வை குறைபாடுள்ள தன்னுடைய அப்பா வை award வாங்க வைத்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்டார் பாபா பாஸ்கர். அதுமட்டுமில்லாது , சமீபத்தில் அவருக்கு behindwoods award வழங்கப்பட்ட போதும் , தன் அம்மாவை தான் அந்த award ஐ வாங்க வைத்தார். அதே போன்று அடுத்தடுத்து எந்த award நான் வாங்கினாலும் , என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் award வாங்க வைத்து விட்டு தான் செத்துபோகணும் என்று கூறி சந்தோஷத்தில் கண்கலங்க வைத்து விட்டார் பாபா பாஸ்கர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in