The Indian Times

“ஐலா பாப்பாக்கு மொட்டை போட்டாச்சு!” சஞ்சீவ், ஆல்யா மானசா வெளியிட்ட latest video

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் சூட்டி இருந்தனர். சமீபத்தில் ஐலா வின் பிறந்தநாளை சிறப்பாக கொட்டடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதோடு மட்டுமல்லாமல் சஞ்சீவ், ஐலாவிற்கு 50 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று வாங்கி கொடுத்தார்.

இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது அவரது குட்டி மகள் ஐலாவிற்கு மொட்டை அடிக்கும் விடியோவை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.Video Embed Credits – SANJIEV&ALYA youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in