The Indian Times

குக்கு வித் கோமாளியில் Re entry கொடுத்த சிவாங்கி!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குக்கு வித் கோமாளி சிவங்கியை பற்றி சொல்லவே வேண்டாம் , இந்த சீசனில் அதிகளவில் ரசிகர்களை சேர்த்தவர்களில் குக்கு வித் கோமாளி சிவங்கியும் ஒருவர். தற்போது இந்த சீசன் முடிவடைந்த நிலையில் சிவாங்கி படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமில்லாது உதயநிதி நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் சிவாங்கி குக்கு வித் கோமாளி செட்டிற்குள் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குக்கு வித் கோமாளியின் சீசன் 3 காகவா இல்லை குக்கு வித் கோமாளி 2 வின் celebration காகவே என்று அதிகாரபூர்வமாக தெரியவில்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in