The Indian Times

ரயிலின் ஒலிகள் VIDEO SONG வெளியாகியது

சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கி அசத்தி வருபவர் அசோக் செல்வன்,இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.அதுபோல முதல் படத்திலேயே கலக்கி விட்டார் அசோக் செல்வன்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் தான் பீட்ஸா 2,இப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருந்தும் மனம் தளராமல் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அப்படி பட்ட கஷ்டத்திற்கு பலனாய் அமைந்தது தெகிடி படம்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று,பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.பல ரசிகர்களின் பார்வையும் அசோக் செல்வன் மீது விழுந்தது.தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வரும் இவருக்கு ஓரிரு படங்கள் தோல்வியை கொடுத்தாலும் பல படங்கள் வெற்றியை தான் கொடுத்துள்ளது.

Advertisement

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.தற்போது இவர் இயக்குனர் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் ரயிலின் ஒலிகள் பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in