The Indian Times

BB5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் திருமண புகைப்படங்கள் இதோ

வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களில் ஒருவர் ராஜு.இவருக்கு அதிர்ஷ்டவசமாக பாக்கியராஜிடம் அறிமுகம் கிடைக்கவே அவரை பின்தொடர ஆரம்பித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.இதில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ராஜு இந்த சீசனில் வெற்றிபெற்று பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி தூக்கி சென்றார்.

Advertisement

தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் அசத்தினார்.மேலும் இவருக்காக விஜய் தொலைக்காட்சி ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தியது.

இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜுவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனக்கான இடத்தினை பிடிக்க ராஜு போராடி வருகிறார்.

மேலும் புதிய படங்களில் இவர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவரின் திருமண புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in