The Indian Times

சூப்பர் ஸ்டார் மகளுடன் சென்னை வெற்றியை விசிலடித்து கொண்டாடிய வரலக்ஷ்மி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

Advertisement

இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.

இவர் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்,அதுவும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் இவருக்கு உயிர்,சென்னையில் நடைபெறும் போட்டியை காண மறக்காமல் வருகை தந்துவிடுவார் வரலக்ஷ்மி.

தற்போது சென்னை அணியின் இறுதி ஆட்டத்தினை காண அகமதாபாத்திற்கு சென்று இரண்டு நாட்கள் காத்திருந்து விளையாட்டை கண்டு மகிழ்ந்துள்ளார் மேலும் அணி வெற்றிபெறவும் சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் கத்திக்கொண்டு மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in