The Indian Times

கோதை உன்கிட்ட பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. மனைவியை திட்டிய அம்மாவை கிழித்தெடுத்த தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் சரஸ்வதி வசுந்தராவிடம் பேசுவதை கோதை கண்டித்துள்ளார் மேலும் பொது இடத்தில் வைத்து சரஸ்வதியை கண்டித்துள்ளார்,இதனை கண்ட தமிழ் கோதை பேசுவதை தடுத்து,வாசு பிரசவத்திற்கு உதவியது சரஸ்வதி தான் அப்போ சரஸ்வதி நல்லவா இப்போ கெட்டவளா என கேட்டு கிழித்தெடுத்துள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,தமிழை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://youtu.be/60-zNb29HiY

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in