The Indian Times

உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது… மேடையில் பயங்கர கடுப்பாகி கத்திய இயக்குனர் மோகன் ஜி

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை ஜி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர் ராதா ரவி,ராஜன்,சரவணன் சுப்பையா,குணநிதி ,மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்திற்கு பிறகு முழுவதுமாக வில்லத்தனமான நடிப்பினை இப்படத்தில் காட்டியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.வருகிற 17 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் ப்ரஸ்மீட்டில் இன்று படக்குழுவினர் கலந்துகொண்டனர்,இதில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் செய்தியாளர்கள் படம் குறித்து கேள்வி கேட்டு வந்தனர்,அந்த வரிசையில் இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது பேசிய அவர்,ஜாதி இருக்குது இயக்குனர் வெற்றிமாறனுக்கு அது தேவையில்லை எனக்கு அது தேவை,அடித்தட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுதுன்னு சொன்னே என்ன திட்டுனாங்க,அதையே தான் வெற்றிமாறன் சொன்னாரு அவரை பாராட்டுறாங்க என கூறியுள்ளார்,அப்பொழுது ருத்ரதாண்டவம் படத்தில் நீங்கள் ஜாதியை பற்றி தானே பேசியிருக்கீங்க என செய்தியாளர் கேட்டதற்கு,கடுப்பாகிய மோகன் ஜி ,எழுந்து நில்லுங்க என்ன குறைபார்த்தீங்க என கோவமாக கேட்டுள்ளார்.இதனால் செய்தியாளர்களுக்கு இயக்குனர் மோகனும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது

Embed video credits : Indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in