The Indian Times

மனைவியுடன் வெறித்தனமாக ஆட்டம் போட்ட ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

தற்போது ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து இணையத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. காரணம் ரோபோ சங்கர் தற்போது கடுமையாக உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.இதனால் இவர் மஞ்சள்காமாலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

மற்றொரு பக்கம் படத்திற்காக உடல் எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,எது உண்மை என்பது தெரியவில்லை.தற்போது ரோபோ சங்கர் அவரது மனைவியுடன் இணைந்து வெறித்தனமாக நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in