The Indian Times

அனிருத் இசையில் நடிகர் கவினின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் கவின்.இந்த தொடர்க்கு பிறகு தொடர்ந்து நாடகங்கள் நடித்து வந்தார்.எந்த தொடரிலும் இவருக்கான வெற்றி என்பது கிடைக்கவில்லை,

அப்பொழுதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த சீசனில் கலந்துகொண்டு மிகப்பிரபலம் ஆகினார்.இவர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் டாடா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்றது

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்த படத்தின் வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டு வரும் வேலையில் உள்ளார் கவின். டாடா படத்தில் எகிறி கவின் மார்க்கெட்டால் தற்போது மிக பெரிய படம் கிடைத்துள்ளது,

நடன இயக்குனர் சதிஷ் இயக்குனராக அறிமுகம் ஆகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்,அனிருத் இசையமைக்கிறார்,இப்படத்தில் கதாநாயகியாக அயோத்தி பட புகழ் ப்ரீத்தி அஞ்சு நடிக்கிறார்,இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,ரசிகர்கள் அவர்களின் வாழ்த்துக்களை கவினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in