The Indian Times

சலார் படத்தின் ட்ரைலர் வெளியாகியது

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 5 மொழிகளில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் சாதனையை வசூலில் படைத்துள்ளது.இதுவரை வெளியாகிய கன்னட படங்களில் முதல் முறையாக ஆயிரம் கோடி வசூலினை தொட்ட படம் இந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : HOMBALE FILMS

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் நீல் பிரசாந்த் கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இவரின் இயக்கத்திற்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியுள்ளது .

தற்போது பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். பிருதிவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in