The Indian Times

சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ்.

அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார்.

Advertisement

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர்.

இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

தற்போது சிபிராஜ் சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டியுள்ளார்.

மேலும் குடும்பத்துடன் வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

ராவன் — 2/12/2023

வாழ்க வளமுடன்.