The Indian Times

நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதி… புதுவித நோயால் பாதிப்பு என தகவல்

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Advertisement

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் குஷி படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமந்தா மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.மேலும் சமந்தாவுக்கு Myositis என்னும் Autoimmune எனும் நோய் இருப்பதாகவும் இதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் அளித்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in