The Indian Times

துபாயில் மனைவியுடன் விடுமுறையை கொண்டாடிய நடிகர் சாந்தனு பாக்யராஜ்

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது

அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி

Advertisement

இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இன்று வரை வலம் வருகிறார் கிகி விஜய்.

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இருவரும் துபாய்க்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in