எனக்கு மனநிலை பாதிப்பு? – நடிகை ஸ்ருதிஹாசன் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி 

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
எனக்கு மனநிலை பாதிப்பு? - நடிகை ஸ்ருதிஹாசன் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி  1
மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்
எனக்கு மனநிலை பாதிப்பு? - நடிகை ஸ்ருதிஹாசன் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி  2
தற்போது இவர் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்ருதி ஹாசன் கலந்துகொள்ளவில்லை என்பதால் அவருக்கு மன ரீதியான பிரச்சனைகள் இருப்பதாக கூறி தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து கேள்வி பட்டு அதிர்ச்சியடைந்த ஸ்ருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மனநிலை பாதிப்பு ஏதும் இல்லை,தனக்கு வைரல் காய்ச்சல் என்பதால் தான் பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
எனக்கு மனநிலை பாதிப்பு? - நடிகை ஸ்ருதிஹாசன் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி  3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment