The Indian Times

குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்.. முதல் முதலாக மகனை ரசிகர்களுக்கு காண்பித்து நெகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்போது சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி,மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் உடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.மகன் பிறந்து இதுவரை பல மாதங்கள் ஆகிய நிலையில் மகனின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பிக்காமல் வைத்திருந்தார்.அதன்படி தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகன் குகனை அறிமுகம் செய்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மகனை பார்த்து அடேங்கப்பா அப்படியே அப்பாவை உறிச்சி வச்சிருக்காரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in