The Indian Times

“நிறைய பிரச்சனை கொடுக்குறாங்க” மேடையில் தாங்கமுடியாத வலியால் துடித்து அழுத சிம்பு! Simbu Crying At Maanadu Press Meet

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார்.

Advertisement

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருந்த மாநாடு திரைப்படம் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது! இந்நிலையில் மாநாடு திரைபடக்குழுவினர் மக்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனக்கு பிரச்சனைகள் அதிகம் தருவதாகவும் அதை தாம் பார்த்து கொள்வதாகவும் என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என கண்ணீர் ததும்ப கதறி அழுதுள்ளார்! அந்த விடியோவை பார்த்த அனைவருக்கும் நெஞ்சம் உருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்! அந்த உருக்கமான விடியோவை நீங்களும் காணுங்கள்! Watch The Video Below!…

https://www.youtube.com/watch?v=Y6DaHUAjYw4

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in