வீடியோ காலில் வாழ்த்திய சிம்பு! கண் கலங்கிய மதன்! நெகிழ்ந்த ரேஷ்மா! Simbu Video Call To Reshma Madhan

விளம்பரம்

சீரியல் நடிகர்கள் திருமண சீசன் போல மாறிவிட்டது! கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சின்னத்திரை பிரபலங்கள் சமீபத்தில் கல்யாண சாப்பாடு போட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்! அந்த வரிசையில் ரேஷ்மா – மதன் ஜோடியும் விதி விலக்கல்ல! சமீபத்தில் தான் இவர்களது திருமணம் வெகு சிறப்பாக சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது! சொந்த பந்தங்கள், நண்பர்கள் உட்பட பிரபலங்கள் சூழ ரசிகர்களின் வாழ்த்துக்களோடு திருமணம் செய்து கொண்டனர் மதன் – ரேஷ்மா!

வீடியோ காலில் வாழ்த்திய சிம்பு! கண் கலங்கிய மதன்! நெகிழ்ந்த ரேஷ்மா! Simbu Video Call To Reshma Madhan 1

விளம்பரம்

இப்பொழுது அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டனர்! சீரியலில் மட்டுமே ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் – மனைவியாக கரம் பிடித்துள்ள செய்தி இவர்களது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது! இவர்கள் சில வருடங்களுக்கு முன்பே காதலிக்க தொடங்கிவிட்டனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு செய்தியே! சின்ன திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் வெள்ளித்திரை பிரபலங்களும் இவர்களுக்கு தவறாமல் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்த வண்ணம் இருந்து வருகின்றனர்!

வீடியோ காலில் வாழ்த்திய சிம்பு! கண் கலங்கிய மதன்! நெகிழ்ந்த ரேஷ்மா! Simbu Video Call To Reshma Madhan 2

இந்நிலையில் மதன் தீவிர சிம்பு ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும்! அப்படி இருக்கையில் இவர்களது திருமணத்திற்கு வர முடியவில்லை என்றாலும் வீடியோ கால் செய்து மனமக்களான ரேஷ்மா மற்றும் மதனை மனதார வாழ்த்தியுள்ளார் சிம்பு! சிம்புவின் திருமண வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்த மதன் மற்றும் ரேஷ்மா அந்த விடியோவை தங்களது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்ய அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top