The Indian Times

தம்பிகளா எல்லாரும் நல்லா சாப்பிடுங்க… ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த STR

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர். 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார். இவருக்கு அண்மையில் வெளியாகிய பத்துதல திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

Advertisement

இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு ராஜா இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார்.இந்நிலையில் சென்னையில் இவர் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.மேலும் தனது ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அதையும் தனது கையால் பரிமாறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அடடேரசிகர்கள் மேல சிம்புவுக்கு எவ்வளவு பாசம் என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in