The Indian Times

அம்மாவாக போவதாக அறிவித்த தளபதி விஜய் பட கதாநாயகி… ரசிகர்கள் வாழ்த்து

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் இலியானா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இப்படத்தில் உருவாகியது.இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் செட்டில் ஆகிவிட்டார்,தொடர்ச்சியாக தெலுங்கில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் இலியானா.பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய நண்பன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் இலியானா.

Advertisement

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தமிழில் தொடர்ச்சியாக நடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழ் சினிமாவை விட்டு முற்றிலும் விலகி ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தினார் இலியானா.இப்படத்திற்கு பிறகு இந்த முறை தெலுங்கில் இல்லாமல் பாலிவுட்டில் கதாநாயகியாக களம் இறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிவிட்டார் இலியானா.முழு பாலிவுட் நாயகியாகவே மாறி வேறு சினிமாவில் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement

இவர் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர் அம்மாவாக போவதாக தனது சமூகவலைத்தள பக்கங்களில் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் தனது குட்டி டார்லினை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.இந்த பதிவில் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in