The Indian Times

அடேங்கப்பா..Arabic Kuthu-க்காக இவ்வளவு சம்பளம் வாங்கினாரா சிவகார்த்திகேயன்? அதிர்ச்சி தகவல் | Sivakarthikeyan

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்பு பெரியத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதுமட்டும் இல்லாமல் ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் ஆனார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் இவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணாமாகவும் இருக்கிறார். சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு மட்டுமல்ல அவரது நகைச்சுவை திறனுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இவர் மெரினா என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. நடிப்பு மட்டும் இல்லாமல் கனா என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். பிறகு கோல மாவு கோகிலா என்ற படத்தில் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சுடி என்ற பாடலை எழுதி பாடலாசிரியராகவும் மாறினார். Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

இவர் தற்போது நெல்சன் இயக்கி இளைய தளபதி விஜய் நடிக்கும் Beast படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை எழுதியுள்ளார். இதற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலை எழுத சிவகார்த்திகேயன் கோடி கணக்கில் சம்பளம் பெற்றதாகவும், ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் எதற்கு என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தியில் அவர் பாடல் எழுதி வாங்கிய சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் மகன் படிப்பு செலவுக்காக கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். Watch the Below Video..!!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in