The Indian Times

குழந்தை பருவத்தில் ரோலெக்ஸ் மற்றும் டில்லி… வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா மற்றும் கார்த்தி.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர்களும் ஒருவர். தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்கள் .இருவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இதில் நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

Advertisement

தற்போது சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் 10 மொழிகளுக்கு மேல் வெளியாக உள்ளது.

தந்தைக்கு அடுத்து சினிமாவுக்கு வந்த சூர்யா நீங்காத இடத்தினை பிடித்தது போல ,அப்பாவும் அண்ணனையும் போல ஆக வேண்டும் என சினிமாவுக்கு வந்தவர் தான் கார்த்தி.பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார்.இவர் வந்தியத்தேவனாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெருமளவு ரசிகர்களால் பேசப்பட்டு கார்த்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது

தற்போது இவரது படத்தின் இரண்டாம் பாகம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.ரசிகர்கள் இப்படத்தினை காண ஆவலாக இருக்கின்றனர்.

சினிமாவில் சிவகுமாரை போல அவரது மகன்களும் பெரிய இடத்தை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு அண்ணனும் தம்பியும் விரைவில் லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் ஒன்றாக நடித்து மோதுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

தற்போது இவர்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in