The Indian Times

வெறித்தனமாக வெளியாகிய தலைவர் 171 போஸ்டர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

Advertisement

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்.அண்மையில் வெளியான ஜெயிலர் படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது, இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெயர் வருகிற ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in