The Indian Times

தளபதி 66 படத்தில் இது போன்ற காட்சிகள் இருக்காதா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் படக்குழு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து வயது ரசிகர்களையும் வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த அமோக வற்றியை தொடந்து இயக்குனர் நெல்சனுடன் வெற்றி கூட்டணி அமைத்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சமீபத்தில் தளபதி 66 படத்தின்

அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தெலுகு இயக்குனர் வம்ஷி இயக்குகிறார். அதோடு இந்த படத்தை தெலுகு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றனர். தளபதி 66 படத்தின் அப்டேடோடு விஜயின் ரீசன்ட் புகைப்படமும் வெளியாகி சமூகவலைத்தளங்களை கலக்கியது. இதை தொடர்ந்து

Advertisement

இந்த படத்தில் தெலுகு நடிகர் நானி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக இல்லாமல் , கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் இதுவரை பார்த்த மாஸான விஜயை விட புதிய விஜயை இந்த படத்தில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று பேசப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in