The Indian Times

தளபதி 68 LOOK-கில் நிர்வாகிகளை சந்திக்க வந்த விஜயின் புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.படம் செப்டெம்பர் மாதம் வெளியாக உள்ளது.

தற்போது விஜய் சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க வருகை தந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in