The Indian Times

மாவீரன் படத்தில் இணைந்த விஜய் சேதுபதி… சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன்.சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.

Advertisement

தற்போது இவர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து உள்ளார்.சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது,இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்,இந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in