The Indian Times

சவுண்டு விட்ட வாயை கிழிச்சிடுவேன்… அர்ஜுனை கோதை முன்னாலேயே மிரட்டிய தமிழ்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நாடகத்தில் தமிழ் கோதையை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிபில் தமிழ் 146 வாக்குகளை பெற்று கோதையை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்,இதனால் தமிழ் தரப்பினர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்,

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் அர்ஜுன் தமிழுக்கு தெரியாமல் கம்பெனிக்குள் செல்ல முயல்கிறார்,அதனை தமிழ் தடுத்து அவரை மிரட்டுகிறார் அதே சமயம் அங்கு கோதை வரவே,நான் ஜெயித்தால் அர்ஜுன் நிறுவனத்தின் பக்கமே வரமாட்டேன் என கூறினான்,தற்போது உள்ளே போகிறான் என கூறி சத்தம் போடுகிறார் தமிழ்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in