The Indian Times

இசையின் தல தளபதியான U1& HIP HOP ADHI இணைந்து பாடி அசத்திய தியாகி BOYS SONG

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படகிலேயே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.இவர்கள் தனி தனியாகவே பாடல்களில் பட்டையை கிளப்பும் நிலையில் தற்போது ஒன்றிணைந்தால் என்ன ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் யுவன் இசையில் ஹிப் ஹாப் தமிழா பாடி தியாகி பாய்ஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது

Advertisement

இந்நிலையில் நடிகர் சுந்தர் சி இயக்கும் காபி வித் காதல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் தியாகி பாய்ஸ் எனப்படும் பாடலை ஹப் ஹாப் ஆதியும் யுவனும் இணைந்து பாடி அசத்தியுள்ளார்கள்.இப்பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இப்பாடலுக்கு யுவன் மற்றும் ஹிப் ஹாப் ரசிகர்கள் இணைந்து பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர்.

Embed video credits : U1 RECORDS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in