The Indian Times

சோகத்தில் இருந்த மீனாவை கலகலப்பாக்கிய உயிர் நண்பர்கள்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.

Advertisement

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.பெண் குழந்தையுடன் மீனா செய்வதறியாது கணவர் இறுதி சடங்கில் நிற்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் மீனாவின் நபர்களான சங்கவி,ரம்பா ஆகியோர் அடிக்கடி மீனாவை நேரில் சந்தித்து பேசி அவரை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளனர்.தற்போது மீனா நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது கொண்டிருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் பழசை மறந்து மீண்டும் தனது மகளுக்காக நடிகை மீனா மீண்டு வருவது தெரிகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த மீனா தான் எங்களுக்கு வேண்டும் என கூறி அவரை மேலும் உற்சாகப்படுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in