The Indian Times

சூரி போல் மேடையில் பேசி காட்டிய நடிகை அதிதி சங்கர்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக நடிக்கும் படம் விருமன்.இப்படத்தினை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்,சுரேஷ்,சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க கிராமத்து கதையில் உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது கொம்பன் பட கூட்டணிக்கு பிறகு நீண்ட இடைவெளியில் வெளியாகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு படத்திற்கு அதிகமாகியுள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தில் முதல் முதலாக கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் அறிமுகமாகியுள்ளார்.இவர் இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் ஆவார்.அதிதி ஏற்கனவே படங்களில் பாடி இருக்கும் நிலையில் படிப்பினை முடித்த பின்பு நடிக்க முடிவெடுத்து இன்று இப்படத்தில் கதாநாயகியாக வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.இப்படத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது.படம் வெளியாவதற்கு முன்னரே அதிதிக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் அதிதி சங்கர் புகைப்படங்கள் தான் வெகுவாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

Advertisement

தற்போது விருமன் படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் நடிகை அதிதி சங்கர் சூரியை போல் பேசி கலாய்த்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தன்னை நடிக்க வைத்த அனைவர்க்கும் நன்றி கூறியுள்ளார் மேலும் நடிகர் சூரியுடன் நடித்த அனுபவம் நன்றாக இருந்தது,சூரி சூட்டிங்கில் சீரியசாக இருப்பார் ,நான் அவரிடம் சார் என்ன கேஸ் ட்ரபிள் ஆ என கேட்பேன் உடனே விழுந்து சிரிக்க தொடங்கிவிடுவார்,நானும் சூரி சாரும் நல்ல ஜாலி பண்ணுவோம் படப்பிடிப்பில் என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Embed video credits : Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in