The Indian Times

நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம் குட்டி Promo | பயங்கர ROMANCEல் NAYAN & WIKKI

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.இவ்வாறு பெரும் கட்டுப்பாடுகளுடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் அண்மையில் விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸ் அனுமதியின்றி திருமண புகைப்படத்தினை வெளியிட்டதால் நெட்பிளிக்ஸ் ஒப்பந்தத்தினை முறித்துக்கொண்டதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவை அனைத்தையும் பொய் என நிரூபிக்கும் விதமாக அண்மையில் நெட்பிளிக்ஸ் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவித்து இருந்தது.அதன்படி தற்போது திருமணத்தின் குட்டி டீசரை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் திருமண வீடியோவுக்கு ஆவலுடன் காத்திருப்பதாக கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : NETFLIX INDIA SHORTS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in