The Indian Times

துப்பாக்கி படத்திற்கு First Choice இந்த ஹீரோ தான்! மாஸான படத்தை மிஸ் பண்ண மாஸ் நடிகர்

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது. இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Advertisement

தற்போது கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயின் கெரியரில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் தவிர்க்க முடியாத திரைபடம் துப்பாக்கி. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருப்பார். தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Advertisement

அதாவது இந்த படத்திற்கு first choice ஆக இருந்தது விஜய் இல்லையாம். இந்த படத்திற்கு first choice நடிகர் சூர்யா தான் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர் முருகதாஸ் முதலில் இந்த படத்தை சூர்யாவை வைத்து தான் எடுக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு சில காரணங்களால சூர்யா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக, விஜய் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆனது துப்பாக்கி.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in