The Indian Times

அயன் சூர்யா போல் கூரை மேல் சறுக்கி Stunt செய்த சமந்தா! Viral Video

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு favourite ஹீரோயின் ஆக இருப்பவர் நடிகை சமந்தா. அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களையும் தாண்டி தற்போது வெப் சீரிஸில் கொடுத்துள்ளார் சமந்தா. அந்த வகையில் இவர் நடித்த பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது . இதில் மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியாமணி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் ஈழ தமிழ் பெண்ணாக சமந்தா நடித்தார்.

Advertisement

இதை தொடர்ந்து சமந்தாவை பாராட்டுபவர்கள் ஒரு பக்கம் இருக்க , சில காட்சிகளால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார் சமந்தா. பல பிரபலங்கள் இந்த வெப் சீரீஸை தடை செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படியிருக்க பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தா ஸ்டண்ட் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அயன் சூர்யா போல் கூரை மேல் சறுக்கி கீழே குதித்து ஸ்டண்ட் செய்த சமந்தாவின் வீடியோ இதோ.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in