The Indian Times

“வலி மாமே வலிப்பு , சளி மாமே சளி” போலீஸ் அதிகாரிகள் போட்ட சரியான குத்து டான்ஸ்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிபயங்கரமாக பரவி வருகிறது. போன வருடம் பாதித்ததை விட இந்த வருடம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் வட இந்தியா பக்கம் அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்கள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு தற்போது அரசாங்கமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அத்தியாவசத்திற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் , அனாவசியமாக வெளியே வர கூடாது என்று பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

இப்படி அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும், பல மக்கள் அதை பின்பற்றுவதில்லை. இதனால் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தமிழக காவல் துறை சந்தானம் நடித்த பிரபலமான பாடலான வலி மாமே வலிப்பு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. Watch Video Below – Video Embeded Credits Galatta voice Youtube Channel

https://youtu.be/EUbnf5h6z_Q?t=4

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in