The Indian Times

டேங்கர் லாரி ஓட்டி அசத்திய இளம் பெண் Viral Video!

ஒரு காலத்தில் , ஆண் ஆதிக்கம் அதிகம் இருந்த சமுதாயம் இது. இன்று பல தடைகளை மீறி ஆண்களை விட பெண்கள் அணைத்து துறையிலும் சாதிக்க துவங்கி விட்டனர். அப்படி இங்கு ஒரு 22 வயது இளம் பெண் டேங்கர் லாரி ஓட்டி அசத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் இந்த இளம் பெண் டெலிஷியா.

இவர் தற்போது கல்லூரியில் மாஸ்டர் டிகிரி செய்து கொண்டிருக்கிறார். இவரது அப்பா டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். இதனால் டெலிஷியா தன் தந்தையோடு லாரியில் பயணிப்பதோடு மட்டுமல்லாமல், அப்பா லாரியை ஓட்டும்போது அதை கவனித்துள்ளார். இதன் மூலம் , லாரி ஓட்டுவதில் ஆர்வம்கொண்ட டெலிஷியா , தன் தந்தையிடம் லாரி ஓட்டுவதை கற்றுக்கொண்டார்.

Advertisement

அது மட்டுமில்லாது license ஆயும் பெற்றுக்கொண்டார் டெலிஷியா. தற்போது தன்னுடைய தந்தை வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் சேர்ந்து லாரி ஒட்டி வருகினார் இந்த பெண். இந்த கொரோனா காலத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாத டெலிஷியா டேங்கர் லாரி ஒட்டி வருகிறார். தற்போது இந்த இளம் பெண் டேங்கர் லாரி ஓட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in