The Indian Times

வலிமை படத்தின் பைக் ரேஸ் சீன் – இணையத்தில் லீக்கான காட்சி

தல அஜீத் தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இவர் பொதுவாக தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து இருந்ததாலும் தற்போது வர இருக்கும் வலிமை படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு எச். வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் அதிக அளவில் வசூல் அள்ளியது. அதை தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவான விசுவாசம் படத்தில் மகள் அன்பை மய்யமாக வைத்து உருவான படத்தில் மிக எளிமையாக நடித்து இருப்பார். அந்த படமும் அதிக அளவில் வசூல் செய்த படமாக இருந்தாலும் நீண்ட நாள் ரசிகர் மத்தியில் இடம் பெறும் படமாக உள்ளது.

Advertisement

இதையடுத்து அடுத்து வெளி வர இருக்கும் வலிமை படத்தை காலை எச். வினோத் இயக்கி வருகிறார். இதில் பல முக்கிய ரேஸ் காட்சிகள் இருக்கும் போல தெரிகிறது. சமீபத்தில் வெளியான ஒரு பைக் ரேஸ் காட்சி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வலிமை திரைபடத்தின் மீ்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதிலிருந்தே ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் ஃபோட்டவை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in