இதுவரை வாரிசு இசைவெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ….

தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு . ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து பிரமாண்டமாக படக்குழு நடத்தி வருகிறது.சரத்குமார்,ஷியாம்,தளபதி விஜயின் அப்பா மற்றும் அம்மா,கதாநாயகி ராஷ்மிக்கா ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

இதுவரை வாரிசு இசைவெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ.... 1

விளம்பரம்

விழா ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் ராஜுவும்,தொகுப்பாளினி ரம்யாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.நிகழ்ச்சியில் முதலில் வா தலைவா என்ற பாடலை ஷங்கர் மஹாதேவன் ,கார்த்திக்,டிரம்ஸ் சிவமணி ஆகியோர் இப்பாடலை மேடையில் பாடி அசத்தினர்.பின்னர் வந்த படத்தின் கதாசிரியர் ஹரி கூறியதாவது,வாரிசு தமிழ்ப்படம் தான் இதுபோன்ற எளிய மனிதரை நான் பார்த்ததே இல்லை என கூறியுள்ளார்.பின்னர் வந்த படத்தொகுப்பாளர் பிரவீன்னிடம் எந்த சீன கூஸ்பம்ஸ் ஆக இருக்கும் என கேட்டதற்கு,பதிலளித்த அவர், படம் extrodinary ,முழு படமும் கூஸ்பம்ஸ் ஆக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

இதுவரை வாரிசு இசைவெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ.... 2

விளம்பரம்

அவரை தொடர்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் ஜானி,எனக்கு தமிழில் மிக பிடித்த கதாநாயகன் என்றால் அது விஜய் சார் தான்,விஜய் சார் என்னை அழைத்து ரஞ்சிதமே பாடலுக்கு நீளமான நடனம் வேண்டும் என்றார் அதன்படி இப்பாடலில் 1:27நிமிஷத்திற்கு சிங்கிள் ஷாட்டில் பிரமாதமாக நடனமாடியுள்ளார் விஜய் சார் என தெரிவித்துள்ளார்.பின்னர் பேசிய ஷியாம் கூறியதாவது,படத்தில் நான் தான் கடைசி பையன் ஆனால் தளபதி விஜய் தான் என்னை விட இளமையாக இருப்பார் என கூறியுள்ளார்.மேலும் படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment