அலைகடலென நேரு அரங்கு முன்பு தளபதியை காண குவிந்த ரசிகர்கள்….. ஆரம்பமாகும் வாரிசு AUDIO LAUNCH

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அலைகடலென நேரு அரங்கு முன்பு தளபதியை காண குவிந்த ரசிகர்கள்..... ஆரம்பமாகும் வாரிசு AUDIO LAUNCH 1

விளம்பரம்

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

அலைகடலென நேரு அரங்கு முன்பு தளபதியை காண குவிந்த ரசிகர்கள்..... ஆரம்பமாகும் வாரிசு AUDIO LAUNCH 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது,லட்சக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி தளபதி விஜயை காண ஆவலாக காத்துக்கிடக்கின்றனர்.மேலும் பலர் விஜயே கடவுளே என கோஷத்துடன் நேரு அரங்கு முன்பு கூடியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.இன்னும் சற்று நேரத்தில் இசைவெளியீட்டு விழா ஆரம்பமாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

விளம்பரம்

Embed video credits : POLIMER NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment