The Indian Times

பாச மருமகளை தூக்கி கொஞ்சும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

எனவே இவருக்காகவே பல புதிய நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா விஜய் டிவி பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு அசத்தினார்.நல்ல விளையாடி மக்களை மகிழ்வித்தார்.வீட்டில் அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது போல சக போட்டியாளர்களை அலற வைத்தார் பிரியங்கா.

இவர் தற்போது தனது 10 வருட தொகுப்பாளினி பயணத்தினை முடிவு செய்துள்ளார்.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்,இவர் தனது தம்பி மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in