The Indian Times

வில்லனாக நடிக்கும் விஷால் ! வெளியான புதிய அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால். சண்டை கோழி , திமிரு , இரும்பு திரை என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையும் இவருக்கு அதிகம் இருப்பதால் இவரை தன் ரசிகர்கள் புரட்சி தளபதி என்று தான் அழைப்பார்கள். இவர் இறுதியாக நடித்து வெளியான படம் சக்ரா. இந்த படத்தை எம்.எஸ். அனந்தன் இயக்கி இருந்தார். இவருக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் மட்டும் முதல் முறையாக வில்லியாக ரெஜினா நடித்து இருந்தார். இதற்க்கு அன்பு இவர் நடித்து வெளியான இரும்பு திரை மிக பெரிய வெற்றி பெற்றது.

Advertisement

அதை தொடர்ந்து இவர் நடித்த சக்ரா படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. படத்தின் ஸ்னீக் பீக் உம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு திறந்த பிறகு ரிலீசான படம், இரும்பு திரை அளவிற்கு சக்ரா வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது இரும்புத்திரை ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்து கலக்கி இருப்பார்.

Advertisement

தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகும் படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்ட விஷால் ரசிகிரகள் விஷால் வில்லனாக நடிக்க போவதை பார்க்க ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in